மங்களமணி மங்களமணி மங்களமணியே


175. இராகம் (மங்களம் ஜெயமங்களம் கிருபாம்பர)                          (131)

பல்லவி

                   மங்களமணி மங்களமணி மங்களமணியே
                   மங்களமணி பாடநேசா இங்கு ஓ ஜனமே

1.         ராஜ ஏசுபாலனுக்குத் துதி என்றுமே
            ராஜாதி ராஜனுக்குப் புகழ் என்றுமே

2.         கானாவில் சென்று அங்கே நன்மையளித்தாய்
            அதுபோல் இங்கேயும் எழுந்தருள்வீரே

3.         இன்று மணம்புரியும் இவ்விருவருடனே
            இறைவனே என்றுமிவர் இதயம் நில்லுமே

4.         அன்புநிறைந்த (மாப்பிள்ளை.... பெண்பேர்)
            ஆரணா காரணா உமதன்பில் நிலைக்கவும்

5.         உந்தனருள் பெற்றவராய் வாழ்க வாழ்கவே
            புத்திரசந்தானம் பெற்று வாழ்க வாழ்கவே

6.         உற்றார் பெற்றார் யாவரும் களித்திடவே
            உரிமையான நேசர் கூடிப் பதம் பிடிக்கவே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு