சித்திரப் பூங்காவனமாம் ஜெருசலைமாநகரம்


173. இராகம் (அள்ளி அள்ளித் தருமமெல்லாம்)                (129)

1.       சித்திரப் பூங்காவனமாம் ஜெருசலைமாநகரம்
            தேவரெல்லாம் வீற்றிருக்கும் சீயோன் மலைச்சிகரம்

2.         சீயோன் குமாரியற்கு திருமணக்கலியாணம்
            ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமென முழங்குதே திரிகோணம்

3.         ஆட்டுக்குட்டிக்கு கலியாணம் கப்பலிலே பரிசம்
            ஆயிரம் தாலந்து தங்கம் வருகுதையா பரிசம்

4.         சீதனங்களொன்றுமில்லை வரிசைகளுமில்லை
            தேவமணவாளனுட திருக்கிருபை செல்ல

5.         பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொற்கண்ணாடி
            பளிங்கொளிவர யஸ்பியைப்போல துலங்குதே அதன் கோடி

6.         சகலவித ரத்தினத்தால் சமைத்த அஸ்திபாரம்
            தற்பரனார் பட்டணத்தின் மகிமையின் சிங்காரம்

7.         பன்னிரண்டு திருவாசல் ஒவ்வொன்றொரு முத்து
            பட்டணத்து அதிபதியோ ஸ்திரீயின் வித்து

8.         ஆசனத்திலிருந்துவரும் ஜீவநதிப்பெருக்கம்
            அக்கரையுமிக்கரையும் கனிகள் தரும் விருட்சம்

9.         கன்னியர்கள் நீராடி காதலியும் குளித்து
            கலியாண மணவறையில் வாழ்ந்திருப்போம் களித்து

10.       செய்ய வெள்ளைத் துயிலுடுத்து ஜீவமுடி சூடி
            ஜெபத்தினிலே தரித்திருப்போம் கிறிஸ்துவைக் கொண்டாடி

11.       பரமண்டலம், பூமண்டலம் படைத்த திரியேக
            பராபரனைப் பாடும் வேதநாயகன் நன்றாக

12.       ஊழியோடூழியே ஊழி சதாகாலம்
            வாழியே வாழி மணவாளன் மணக்கோலம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு