27 June 2018

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

நிஜீ.கீதங்கள்:434

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                             பல்லவி

 

                   அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

                        எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

                             சரணங்கள்

 

1.         இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே

            சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்

            விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே

            வேகமாய் வேகமாய் வேகமாய் - அந்த நாள்

 

2.         கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே

            பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே

            வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே

            நீங்குமே நீங்குமே நீங்குமே - அந்த நாள்

 

3.         ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்

            பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்

            ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே

            மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம் - அந்த நாள்

 

4.         புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே

            நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே

            தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே

            என்றுமே என்றுமே என்றென்றுமே - அந்த நாள்

 

5.         பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே

            பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே

            பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்

            பருகுவோம் பருகுவோம் பருகுவோம் - அந்த நாள்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...