சுவிசேஷத்தைக் கேட்பீரே
பல்லவி
சுவிசேஷத்தைக் கேட்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே
சரணங்கள்
1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே
சிலுவையைச் சுமந்தாரே
ஜீவனையும் ஈந்தாரே - சுவி
2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலே யன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே - சுவி
3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்
வருவீரே என்னிடமே
தருவேன் இளைப்பாருதலே - சுவி
4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம்
என்றாரே
உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல
இரட்சிப்பைப் பெறுவாய் - சுவி
5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்குத் தப்புவீரோ? - சுவி
Comments
Post a Comment