சிலுவை சுமந்த உருவம்
பல்லவி
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின
இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே
பாய்கின்றதே
நம்பி
இயேசுவண்டை வா
1. பொல்லா
உலக சிற்றின்பங்கள்
எல்லாம்
அழியும் மாயை
காணாய்
நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின்
அன்பண்டைவா - சிலுவை
2. ஆத்தும
மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்துமம்
நஷ்டமடைந்தால்
லோகம்
முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம்
ஒன்றுமில்லையே - சிலுவை
3. பாவ
மனித ஜாதிகளைப்
பாசமாய்
மீட்க வந்தார்
பாவப்
பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம்
சுமந்தார் - சிலுவை
4. நித்திய
ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய
மோட்ச வாழ்வில்
தேடி
வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை
அதை அடைவாய் - சிலுவை
5. தாகமடைந்தோர்
எல்லோருமே
தாகத்தை
தீர்க்க வாரும்
ஜீவத்
தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன்
உமக்களிப்பார் - சிலுவை
Comments
Post a Comment