சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
பல்லவி
சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!
அனுபல்லவி
சிலுவையின்
அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும
நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
சரணங்கள்
1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம் -
சிலுவை
2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் - சிலுவை
3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் - சிலுவை
Comments
Post a Comment