07 June 2018

புத்தியில்லாக் கன்னியரே நீங்கள்


251.                                                         (206)

1.       புத்தியில்லாக் கன்னியரே நீங்கள் போறவழி சோரவழி
            சத்தியத்தின் பாதைவிட்டு நீங்கள் சாய்வதும் சஞ்சலமே

2.         ஆலயத்தில் கேட்ட சொல்லை பொல்லா ஆகாயப் பறவை தின்றால்
            கோலிழந்த அந்தகன்போல் பலகோரணிக்குள்ளாவீரே

3.         ஓடிஓடிப் பணம் தேடி சுத்த ஓய்வுநாளை மீறுகிறீர்
            கூடுமென்று எண்ணாதேயும் தேவகோபம் வரும் சாபம் வரும்

4.         ஏழுநாளைத் தந்தவர்தான் அந்த எழிலொன்றைக் கேட்டுவந்தால்
            கேள்வியுண்டோ கொடுப்பதற்கு நீரும் கேலிசெய்தால் தப்புவீரோ

5.         நன்றியற்ற மாந்தர்களே தேவன் நன்மை செய்ய நீர் தீமை செய்தால்
            ஒன்றுமுமக்கில்லாமலே தேவன் ஊதிவிட்டால் என்ன செய்வீர்

6.         செல்வம் நிலை எனவே நீங்கள் தெளிவுமிகக்கொள்ளுகிறீர்
            எல்லாமிழந்து விட்டு உப்பாய் எரிந்தாளே லோத்தின் பெண்டு

7.         இத்தலத்தில் வீடு கட்ட நீங்கள் இடம் பார்த்து நாள் பார்த்தீர்கள்
            நித்தியத்தில் வீடு கட்ட நீங்கள் ஒன்றும் செய்யலையே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...