என்ன செய்வேன் சுவாமி
252.
(207)
பல்லவி
என்ன
செய்வேன் சுவாமி என்ன செய்வேன் - சுவாமி
நின்னையல்லால்
யாரெனக்கு என்ன செய்வேன்
அனுபல்லவி
என் சுவாமி என் துரையே என்
கணவா என் குருவே - என்ன
1. மண்ணாசை கொண்டு மனம் புண்ணானேன் பாவிநானும்
உன்னாசை கொண்டேனிப்போ நின்னருமை தெரியுதையா
- என்ன
2. ஏசையா என் கணவனென்று கூசாமல் தேசமெங்கும்
ஆசையோடு சொல்லும் எனை மோசம் செய்ய வாசிதானோ - என்ன
3. கிட்டி உனையானெருக்க எட்டி எட்டிப் போகின்றாயே
இஷ்டமோ எனைத்தவிர்க்க வைத்திட உன் சித்தம்
தானோ - என்ன
4. வாக்குத்தத்தம் தந்தவனே போக்குச்சொல்ல ஏதுவுண்டோ
ஏக்கத்தையும் என் இதய வீக்கத்தையும் சற்றேயாராய்
- என்ன
Comments
Post a Comment