வாடி அம்மா வாடி
250. கும்மிப்பாட்டு
(205)
1. வாடி அம்மா
வாடி ஒரு ஞானப்பாட்டைப் பாடி
தேவசுதனைத்தேடி நித்ய ஜீவ பாதையில் வாடி
2. ஓடு அம்மா ஓடு ஒரு சாலை வழியே ஓடு
மோட்ச வழியைத்தேடு உனக்கங்கே இருக்குது
வீடு
3. கட்டு அம்மா கட்டு சத்திய கச்சையைக்கட்டு
பரிசுத்த புடவையைக்கட்கு அது தான் உனக்குப்
பட்டு
4. முத்து நல்ல முத்து வேத வசனக்கொத்து
வேத நெறிகள் பத்து அதுவே உன்சம்பத்து
5. அன்பு நல்ல அன்பு ஆண்டவர் பேரிலன்பு
ஒருவரிலொருவர் அன்பு மற்றதெல்லாம் வம்பு
6. சண்டையடி சண்டை இரண்டு பெண்கள் சண்டை
தீர்ந்ததடி சண்டை சாலோமோனினண்டை
7. கொண்டையடி கொண்டை அப்சலோமின்கொண்டை
தொங்குதடி கொண்டை கர்வாலி மரத்தண்டை
8. கள்ளியடி கள்ளி விக்கிரகக்கள்ளி
ராகேலல்லோ கள்ளி லாபான் மனம் தள்ளி
9. தீனாளடி தீனாள் தெருவுலாத்தித்தீனாள்
சீகேமுக்குப்போனாள் சீரழிந்துபோனாள்
10. அன்னாளடி அன்னாள் பிள்ளையற்ற அன்னாள்
அவர் பேரைச் சொன்னாள் பிள்ளை பெற்றாள்
அன்னாள்
11. கூழு அடி கூழு கொம்மடிக்காய் கூழு
கூழுக்குள்ளே சாவு கூப்பிட்டார் எலிசாவை
12. வேசியடி வேசி ராகாப் என்ற வேசி
வேசி விசுவாசி எபிரேயர் வாசி
13. பாதை அம்மா பாதை இயேசுக்கிறிஸ்துவே பாதை
நித்திய ஜீவனாம் பாதை அதை சேராவிடில் வாதை
Comments
Post a Comment