விதைப்பும் அறுப்புமே
1. விதைப்பும் அறுப்புமே
பூமியின்
மீதினிலே
மாறி
மாறி வருமே
பகலும்
இரவுமாய்
வருடங்கள்
மாயமாய்
நழுவியே
சென்றிடுமே
பல்லவி
சிந்திப்பீர்,
சிந்திப்பீர்
காலங்களைச்
சிந்திப்பீர்
இயேசு
கிறிஸ்துவின்
வேலை
ஒன்றே - இன்று
பிரதானம்
2. ஒன்று
இரண்டென
எத்தனை
வருடங்கள்
கனவென
கழிந்தது பார்
எஞ்சிய
நாட்களை வஞ்சிக்காது
தேவப்
போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்
3. நாடுகள்
நடுவினில்
வாய்ப்புகள்
உனக்காக
எத்தனை
நாட்கள் உண்டு
சாதகமானதோர்
வாசல் இங்கு கண்டு
வந்து
பயன்படுத்து -
சிந்திப்பீர்
4. ஆழக்கடல்களில்
படகைச்
செலுத்திட
கடல்போன்ற
தேவையல்லோ?
பாவக்
கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்
படகு
உன் சாட்சியல்லோ? - சிந்திப்பீர்
Comments
Post a Comment