சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே


பல்லவி

            சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு
            சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
            சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

சரணங்கள்

            காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ)
            கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
            வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2)

1.         கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே    கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
            கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
            கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும்                  - சத்தம்

2.         தேவை அதிகம் ஏராளம் ஆ ஏராளம் ஏராளமே
            குஜராத் பீகார் யூபியில் ஏராளம் ஏராளமே
            இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில்
            நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்                 - சத்தம்

3.         உலக மாமிசப் பிடியினின்றும் ஆ பிசாசின் தந்திர வலையினுன்றும்
            விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
            உப்பைப் போல கரைந்து விடு
            மெழுகைப் போல உருகி விடு                           - சத்தம்

4.         வெற்றியே தரும் ஆண்டவருக்கு ஆ காணிக்கை காணிக்கையே
            உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கை காணிக்கையே
            தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
            சபைகள் ஏராளம் பெருகிவிடும்             - சத்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு