தந்தேன் என்னை இயேசுவே
பல்லவி
தந்தேன்
என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே
ஊழியஞ்செய்யத்
தந்தேன்
என்னைத் தாங்கியருளும் - தந்தேன்
சரணங்கள்
1. ஜீவ
காலம் முழுதும்
தேவ
பணி செய்திடுவேன்
பூவில்
கடும் போர் புரிகையில்
காவும்
உந்தன் கரத்தினில் வைத்து - தந்தேன்
2. உலகோர்
என்னை நெருக்கிப்
பலமாய்
யுத்தம் செய்திடினும்
நலமாய்
சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில்
நாதா வெல்லுவேன் - தந்தேன்
3. உந்தன்
சித்தமே செய்வேன்
எந்தன்
சித்தம் ஒழித்திடுவேன்
எந்த
இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே
அங்கே இதோ போகிறேன் - தந்தேன்
4. கஷ்டம்
நஷ்டம் வந்தாலும்
துஷ்டர்
கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும்
ஆளும் தேவனே
அடியேன்
உம்மில் அமரச் செய்திடும் - தந்தேன்
5. ஒன்றுமில்லை
நான் ஐயா
உம்மாலன்றி
ஒன்றும் செய்யேன்
அன்று
சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே
அடியேனை நிரப்பும் - தந்தேன்
Comments
Post a Comment