தோத்திரம் துதி பாத்திரா உம்மை
பல்லவி
தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும்
என்றும் துதித்திடுவேன்
அனுபல்லவி
காத்தீரே
என்னைக் கருத்தாக
வழுவாமல்
என்னை உமக்காக
எடுத்தீர்
எனையும் உமக்காக
கொடுத்தீர்
உமையும் எனக்காக - தோத்
சரணங்கள்
1. வல்ல
வான ஞான விநோதா
துதியே
துதியே துதித்திடுவேன்
எல்லாக்
குறையும் தீர்த்தீரே
தொல்லை
யாவும் தொலைத்தீரே
அல்லல்
யாவும் அறுத்தீரே
அலையும்
எனையும் மீட்டீரே -
தோத்
2. நம்பினோரைக்
காக்கும் தேவா
துதியே
துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும்
படைத்தீரே
அம்பரா
உந்தன் வாக்காலே
எம்பரா
எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க்
குந்தன் தயவாலே - தோத்
3. கண்ணின்
மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே
துதியே துதித்திடுவேன்
அண்ணலே
உந்தன் அருளாலே
அடியாரைக்
கண் பார்த்தீரே
மன்னா
எமக்கும் நீர் தாமே
எந்நாளும்
எங்கள் துணை நீரே - தோத்
4. தீயோன்
அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே
துதியே துதித்திடுவேன்
தேவா
நீர் உந்தன் சிறகாலே
தினமும்
மூடிக் காத்தீரே
தீதணு
காதும் மறைவினிலே
தேடியுமதடி
தங்கிடுவேன் - தோத்
5. அல்லேலூயா
தோத்திரமே
துதியே
துதியே துதித்திடுவேன்
அகில
சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை
துதியா திருப்பேனோ?
அல்லும்
பகலும் நித்தியமாய்
அன்பே
உமையும் துதித்திடுவேன் - தோத்
Comments
Post a Comment