21 June 2018

தோத்திரம் பாடிப் போற்றுவேன்


1.       தோத்திரம் பாடிப் போற்றுவேன்
            தோத்திரம் இயேசு ராஜனுக்கே
            ஆதியும் அந்தமு மில்லோனே
            அரூபனே உமக்கென்றும் தோத்திரம்

                        அல்லேலூயா அல்-லேலூயா
                        பொற்பரனே - ஒமேகாவே

2.         பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே
            புல்லணை மீதிலே தோத்திரம்
            பட்சமுற்று எந்தன் பாவம் தீர்த்த
            பெத்தலை வாசனே தோத்திரம்

3.         மாயமாம் உலகை மறந்து நானும்
            மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
            மயங்காமல் நீர் தாரணியில்
            மனுவான அன்புக்காய் தோத்திரம்!

4.         மங்களமே சீயோன் மணாளா!
            மாறாத பூரண சீராளா!
            மங்கிடா நித்திய வாசனே!
            மாசற்ற அன்புக்காய் தோத்திரம்!

5.         அமரர் போற்றும் அழகுள்ளோனே!
            அரூபியே சொரூபியே தோத்திரம்!
            அளியும் ஆதி அன்பையே!
            வழியில் விரைந்து செல்லவே!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...