இவரே பெருமான், மற்றப்பேர்


321. பியாகு (நீதியாமோ நீர் சொல்லும்)                 ஆதி தாளம்

பல்லவி

          இவரே பெருமான், மற்றப்பேர்
            அலவே பூமான், - இவரே பெருமான்

1.         கவலைக்கிடங் கொடுத் தறியார், - வேறு
            பவவினை யாதுமே தெரியார், - இப்
            புவனமீது நமக்குரியார்                          - இவரே

2.         குருடர்களுக் குதவும் விழியாம், - பவக்
            கருமஇருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம்
            இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம்     - இவரே

3.         பலபிணி தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்
            வலமையில் மிக்க விபகாரி, - எக்
            குலத்துக்கும் நல்ல உபகாரி                 - இவரே

4.         அறஞ் செய்வதினில் ஒரு சித்தன், - கொடு
            மறம் விடு பவர்க்கருள் முத்தன், - இங்கே
            இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்            - இவரே

5.         அலகைதனை ஜெயித்த வீரன், - பவ
            உலகை ரட்சித்த எழிற்பேரன், - விண்
            ணுலகு வாழ்தேவ குமாரன்                    - இவரே

6.         பொன்னுலகத் தனில்வாழ் யோகன், - அருள்
            துன்ன உலகில் நன்மைத் தேகன், - நம்பால்
            தன்னையளித்த ஓர் தியாகன்.               - இவரே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு