பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லமே

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லமே

            இறைவனின் ஆசி என்றும் தங்கவே

            பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கமே

            இறைவனின் ஆசி என்றும் பெருகவே

                        சாலமோனின் ஞானத்தை போல

                        ஆபிரகாமின் சந்ததி போல

                        கடற்கரையின் மணலை போல

                        விண்மீன்களின் கூட்டத்தைப் போல

                        உந்தன் வாழ்வு என்றும் செழிக்கட்டும்

                        உந்தன் வாழ்வு என்றும் சிறக்கட்டும்

 

1.         இயேசுவின் வார்த்தைகளை நீ தினமும் வாசித்தால்

            உயர்வோடு வாழ்ந்திடலாம் அவர் அன்பை ருசித்திடலாம் - 2

            சாத்தானின் ஆயுதங்கள் உனக்கு எதிராய் பலிக்காதே - 2

            இயேசுவின் வார்த்தைகளால் சாத்தானை ஜெயித்திடலாம் - 2 - பிறந்தநாள்

 

2.         உன் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்திடுவார்.

            உன் கால்கள் வழுவாமல் தாங்கியே நடத்திடுவார் - 2

            ஜீவனுள்ள நாட்களெல்லாம் நித்தமும் காத்திடுவார் - 2

            நன்மையும் கிருபையுமே உன்மீது தங்கிடுமே - 2 - பிறந்தநாள்

 

 

- Samraj Williams

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்