30 January 2025

அபிஷேகம் தாரும் வல்ல தேவனே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                   அபிஷேகம் தாரும் வல்ல தேவனே

                        வானவரோடு பறந்து செல்ல

 

1.         சத்திய ஆவி வல்லமை என்னில்

            பூரணமாகப் போர்த்திடுமே

            சத்திய வார்த்தை என்னில் நிலைக்க

            சுத்திகரித்தென்னை நிறைத்திடுமே - அபி

 

2.         நித்திய தேவன் நீசனாம் என்னை

            தன்னோடு சேர்க்க தந்த ஆவி

            குற்றம் குறைகள் கறை திரைகள்

            முற்றுமே நீக்குமே அபிஷேகம் - அபி

 

3.         திக்கற்றோராக கை விடாதென்றும்

            தேற்றரவாளனாய் வந்தார் நம்மில்

            திரியேக தேவன் சீயோனின் ராஜன்

            அச்சாரமாய்த் தந்த அபிஷேகம் - அபி

 

4.         அப்போஸ்தலர்கள் மேல் வீட்டில் கூடி

            அபிஷேகம் பெற்ற வல்லமையால்

            அடையாளங்களினால் இயேசுவின் அன்பை

            அறிவித்தே சென்றார் சாட்சியாக - அபி

 

5.         சாத்தானின் சேனை தோற்றோடச் செய்யும்

            சர்வாயுத வர்க்கம் அபிஷேகம்

            மாமிசமான யாவரின் மேலும்

            அக்னி ஆவியை போர்த்திடுமே- அபி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...