அபிஷேகம்
இறங்கட்டும் அபிஷேகம் இறங்கட்டும்
அபிஷேகம் அபிஷேகமே
நுகங்களை முறிக்கட்டும் கட்டுகளை அறுக்கட்டும்
அபிஷேகம் அபிஷேகமே - 2
ஆவியில் விடுதலை ஆத்மாவில்
விடுதலை
சரீரத்தில் விடுதலையே
இப்போ முழுவதும் விடுதலையே
- 2 - அபிஷேகம்
1. வீசட்டும் காற்று வீசட்டும் - 2
உலர்ந்த எலும்புகளை உயிர்பிக்கட்டும்
- 2
வீசட்டும் காற்று வீசட்டும் - 2
கர்த்தரின் சேனைகளாய் எழும்பிடட்டும்
- 2
2. அக்கினி தேவ அக்கினி - 2
செத்தைகளை சுட்டெரிக்கும் அக்கினி - 2
அக்கினி தேவ அக்கினி - 2
சத்துருக்களை பட்சித்திடும் அக்கினி -
2
3. வல்லமை ஆவியின் வல்லமை - 2
சர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை
தேள்களையும் மிதித்திடும் வல்லமை
வல்லமை ஆவியின் வல்லமை - 2
பிசாசை துரத்திடும் வல்லமை - 2
No comments:
Post a Comment