188.
இராகம்: துசாவந்தி ஆதிதாளம்
(432)
பல்லவி
அப்பனே, நீர் எனக்கு எப்படியும் இரங்கி
அருளிச் செய்ய
வேணும் நல் வகையை;
அனுபல்லவி
தப்பிக் கெட்ட எனக்காய் ஒப்புடன் ரத்தம்
சிந்திச்
செப்பமுடன் எனை மீட்டநன் மெய்ப்பரனே, கிறிஸ்தரசே
- அப்
சரணங்கள்
1. வஞ்ச வினைக்குட் பட்டேன்; நெஞ்சம் உருகிப்
புண்ணாய்
வாடி லைந்து, பவமதினாலே-தினம்
சஞ்சலப் பட்டுழன்று, நஞ்சுண்ட கெண்டையைப்போல்
தயங்கி மயங்கி மிகத் தியங்குவனோ?-ஏழை
தஞ்சம் எனக்கு நீர் என் கெஞ்சுதலுக்கு
இரங்கிப்
பஞ்ச பவங்களைத் தீர்த்தருள்; மிஞ்சும்
கிருபை வழிபாரும், மெய் - அப்
2. நாடிப் பவத்தில் விரைந் தோடி விழுந்து கெட்டு
நைந்து கரைந்து மனம் மெலிவேனே?-மிக
வாடித் தவித்த என்னைத் தேடி ரட்சிக்க நீர்தாம்
வலிய வந்துதிரத்தைச் சொரிந்தீரே;-இப்போ
பாடிக் கெஞ்சம் எனக்குச் சூடிக் கிருபை
அருள்;
நீடி தயையினைப் புரியும்; கொண்டாடி உமக்கூழியம்
செய்ய மெய் - அப்
3. முன்னாள் நீர் ஈந்ததெல்லாம் என்னாலே நான்
அழித்து
முழுவதையும் இழந்து போனேனே,-பாவி
தன்னாலே கெட்டவன் நான் பின் ஆரிடம் போவேன்
நீர்
தாமே எனக்குப் பிணைப்பட்டீர், ஐயா-தேவ
மன்னா, மெய் மன்னா ஓசன்னா, க்ருபை செய்யும்;
இந்நாள் முதல் நான் மகிழ்ந்தினி எந்நாளும்
உமக்கூழியம் செய்ய மெய் - அப்
-
மரியான் உபதேசியார்
No comments:
Post a Comment