பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
பின் மாரியாக
பொழிந்டுமே
1. எலியாவின் தேவன் எங்கே என்றானே
சலியாமல் ஓடி
சால்வை பெற்றானே - 2
பரலோக ராஜ்யம்
பரிசுத்தவான்கள்
பலவந்தமாக்கும்
காலம் இதுவே - (2) - பேரின்ப
2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல்
தேங்கும் தண்ணீர்கள்
போன்ற அநேகர் - 2
அனலுமில்லாத
குளிருமில்லாத
அனுபவத்தோடே
ஜீவிக்கின்றாரே - (2) - பேரின்ப
3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா
சடுதி ஒளியால்
சந்திக்கும் மூவா - 2
உலரும் எலும்பும்
உயிரை அடையும்
உயிர் மீட்சி
தாரும் என் இயேசு நாதா - (2) - பேரின்ப
4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர்
பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் - 2
தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன்
என்றுரைத்தாரே - (2) - பேரின்ப
5. ஊனர் குருடர் தீரா
நோயாளர்
ஊமை செவிடர் பேயால்
பாடுவோர் - 2
அற்புத செயலால் வேண்டிடுவோமே
ஆண்டவரிடமே
வேண்டிடுவோமே - (2) - பேரின்ப
6. சத்திய பரனை பக்தியுடனே
நித்திய யுகமாய்ப்
பாடிடுவேனே - 2
ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே
ஏழை என் தாகம் தீர்ந்திடுவேனே
- (2) - பேரின்ப
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment