வாரும் என் உள்ளத்தின் துன்பம் நீக்க வாரும்
வாரும் என் உள்ளத்தின், துன்பம்
நீக்க வாரும்
வேண்டிடும் பாவி என், பாரம்
நீங்க அருளும்
அழைக்கிறேன் உம்மை, படைக்கிறேன்
என்னை
கழுவிடும் உம் இரத்தத்தால்
கழுவிடும் உம் இரத்தத்தால்
- 2
1. பாவத்தின் பாரம் சுமந்தவனாய்
ஆறுதல் இழந்து தவிப்பவனாய் - 2
அழைக்கும் எந்தன் குரலைக் கேட்டு
இறங்கிடும் இறைவா, இறங்கிடும் இறைவா -
வாரும்
2. பெலனற்றுப் போகிறேன் இரக்கம் செய்யும்
கரத்தினால் என்னைக் குணமாக்கிடும் - 2
மரண இருளின் விழிம்பில் நின்று
கதறிடும் குரல் கேளும், விடுதலை தாரும்
- வாரும்
3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
தன்னுயிர் தந்திட்ட தேவனே - 2
கிருபை வேண்டும் ஜெபத்தைக் கேட்டு
கருணை பொழிந்திடுமே, கறைகள் நீக்கிடுமே
- வாரும்
- Vincent Selva Kumar
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment