அதிகாலை துயில் எழுந்து
அதிகாலை துயில் எழுந்து
ஆண்டவரின் பாதம் பணிந்து
அப்பா அப்பா என்று கூப்பிடுவேன் - 2
குளித்து எண்ணெய் பூசி
தெய்வீக உடையணிந்து - 2
ஜெபக்களம் சென்றிடுவேன்
- நான்
ஜெபக்களம் சென்றிடுவேன்
- (2) - அதிகாலை
1. விடியலில் விரைந்தெழுந்து
விண்ணவரின் முகம் காண - 2
கன்மலை மேல் வந்து காத்திருப்பேன்
தேவனின்
பாதம் அமர்ந்து
உபவாச
தவம் இருந்து - 2
உன்னதர் புகழ் பாடுவேன் - நான்
உன்னதர் புகழ் பாடுவேன் - அதிகாலை
2. கடந்திட்ட நாட்கள் எல்லாம்
கரம் தன்னில் தூக்கிக் கொண்டு - 2
சுமந்திட்ட விதம்தனை
நினைத்திடுவேன்
இருந்திட இடம் தந்து
அருந்திட உணவு தந்து - 2
அணிந்திட ஆடை தந்தீரே - என்னை
சுகமுடன் வாழ வைத்தீரே - அதிகாலை
3. இனி வரும் நாட்களெல்லாம்
கனிதரும் நல்மரமாய் - 2
திகழ்ந்திட அருள் புரிந்து வரம் தரணும்
வாழுகின்ற
நாட்கள் எல்லாம்
உமக்காகவே
வாழ்ந்து - 2
பரலோகம் வந்து சேரணும் - நான்
பரலோகம் வந்து சேரணும் - அதிகாலை
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment