அதி சுந்தர ரூப குமாரன் இயேசு
அதி சுந்தர
ரூப குமாரன் இயேசு
துதி ஸ்தோத்திரம் செய்திட
பிறந்தனரே
வேதவாக்கியங்கள்
நிறைவேறிடவே
தேவன் தயவாய் சுதனை ஈன்றனரே - 2
1. கன்னிமரி மடியில் சிசு பாலனாக
யூத ராஜாவாக
இயேசு உதித்தனரே - 2
நடு ராவினிலே
கடும் குளிர்தனிலே - 2
படும் நிந்தையேதான்
உந்தன் சொந்தமன்றோ - அதி சுந்தர
2. தேவ சேனை வானில் தோன்றி வாழ்த்தினாரே
ஆயர் விரைந்து சென்று தாழ் பணிந்தனரே
- 2
ராயர் மூவருமே காணிக்கைப் படைத்து - 2
தேவ பாலனை வாழ்த்திப் போற்றினாரே - அதி சுந்தர
3. விசுவாசம் என்னும் கேடையம்
பிடித்து
சாத்தான் சோதனை யாவையும் ஜெயத்திடுவோம் - 2
அவர் பிறப்பின் மூலம் காட்டிய தாழ்மையை
- 2
நாமும் பின்பற்றி வாழ்ந்து சுகித்திடுவோம் - அதி சுந்தர
- A.J.R. SATYA
YouTube Link
Comments
Post a Comment