அப்பா நீர் எங்களுக்கு
அப்பா நீர் எங்களுக்கு
பயத்தின் ஆவியைத் தராமல்
தைரியத்தின்
ஆவி தந்தீரே
அப்பா நீர் எங்களுக்கு
சோர்வின்
ஆவியைத் தராமல்
உற்சாக ஆவி தந்தீரே (2)
1. ஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்கு - இந்த
பைத்தியங்களைத்
தெரிந்து கொண்டீர் - 2
உள்ளதை அவமாக்கும்
படிக்கு - (2)
இந்த இல்லாததைத்
தெரிந்து கொண்டீர் - (2) - அப்பா நீர்
2. சாத்தானின் கோட்டைகளை தகர்க்க - எனக்கு
சத்திய வார்த்தைகளைத் தந்தீர் - 2
ஜெபிக்கின்ற
ஆவியைத் தந்து - (2)
என்னை ஜெயமுள்ள
மகனாக்கினீர் - (3)
3. என் மாம்சீக ஆசைகளை
அழித்து - நல்
தெய்வீக ஆவியைத்
தந்தீர் - 2
விசுவாச ஜீவியம்
வாழ்ந்து - (2)
இன்பக் கானானாம் பரலோகம் சேர்வேன் - (3)
- மோசஸ் ராஜசேகர்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment