தோம் தோம் ததநிதந ததிநதந
நித தோம் தத்தநிதன ததிநதன
தந்திர தோம் ததநிதந
அபிஷேக நாயகனே - என்னை
ஆளும்
அன்புள்ள எந்தன் தெய்வமே
- இறைமகனே
அபிஷேக நாயகனே
1. உன்னத கோமானே - (2)
இவ்வுலகம் போற்றும் இயேசு தெய்வமே -
(2)
அன்புக்குப் பிறப்பிடமே - (2)
என் அருந்தவ தவபுதனே சுதனே - அபிஷேக
2. நன்மைகள் செய்பவராய் நானிலம் சுற்றி வந்த
நல்லவர் உம்மைப்பாட நாவினை தந்தீர் நன்றி
- 2
கண்ணீரை துடைப்பவரே
என் கவலைகள் தீர்ப்பவரே - 2
மண்ணின் மன்னவரே - என்
மறைபொருள் ஞானவனே - 2
பரனே பரனே பரனே - அபிஷேக
3. கள்ளன் என்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்ததினால்
உள்ளமே பொங்குதய்யா நன்றி என்று சொல்லுதய்யா
- 2
சிலுவையின் நிழல் மறைவே
என் பாவம் போக்கும் பரிசுத்தரே - 2
ஏலீமின் நீர் ஊற்றே
என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே - 2
ஊற்றே ஊற்றே ஊற்றே - அபிஷேக
4. வேதப் பரம்பொருளே ஞான மணிசுடரே
பாதம் பணிய வந்தேன் கோடி கோடி நன்றியைய்யா
- 2
ஆவியின் அருள் நிறைவே
என் ஆனந்த கோமானே - 2
சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே
என் சேஷ்டபுத்திர நாயகனே - 2
சுதனே சுதனே சுதனே - அபிஷேக
- Pr. Moses Rajasekar
No comments:
Post a Comment