அப்பா உம்மை ஆராதிக்கிறேன்
அப்பா
உம்மை ஆராதிக்கிறேன்
இயேசப்பா உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
1. துதிகளின் நடுவில்
வாசம் செய்யும் தூய தேவனே
உம்மை துதித்து பாடுவேன்
உம்மை போற்றி பாடுவேன்
2. ஞானம் நீதி நிறைந்த
எங்கள் இயேசு ராஜனே
உம்மை பாடித் துதிப்பேன்
நடனம் ஆடித் துதிப்பேன்
3. சிங்காசனம் விட்டு வந்த
தூய தேவனே
ஈன சிலுவை சுமந்து
உந்தன் ஜீவன் ஈந்தீரே
Comments
Post a Comment