288. இராகம்: அசாவேரி ரூபகதாளம்
(460)
பல்லவி
அபிஷேகஞ்
செய்துவைத்தாரே-குருமார் கூடி;
அன்பு
கொண்டாடினாரே
அனுபல்லவி
ஜெபதப சிந்தையார-அபசாரம்[1] யாதுந்
தீர
தேவதூதர்கள் பாட,-கோவிலிற் பலர் கூட -
அபி
சரணங்கள்
1. திரள், திரளாகச் சேர்ந்த-ஜனங்கள் கண்டுமகிழத்
திவ்யவா[2] ரணமுறைச்-செயல்கள்-பல
நிகழ
அருளணி யன்பமைந்தோர்-அருகினின்று புகழ
அஞ்ஞான திமிரம்போக்[3]-கருண[4] னீயாவையென்று
- அபி
2. ஆன மந்தையை மேய்க்கும்-அருளார் கோனானீயாவை
அகிலத்தாரேற்றிப் போற்றும்-அழகிய தீபம்போல்
வை
வானமிருந்துவரு-மாவி வதிய வாழ்வை
மாசணுகாத வாசீர்-வாதம் பெறுவை யென்று
- அபி
3. வலக்கரங் கொருந்துநன்-மந்தையை வொப்படைத்து
வகைவகை செய்கடமை-வகுத்து வகுத்துரைத்து
கலக்கமில் லாமலதைக்-காத்துப் புன்மேய்ச்சல்
காட்டி,
காலந்தோறுஞ் சுனைநீர்-காதலா[5] யூட்டென்று
- அபி
4. அன்பார் நாயகியுடன்-அன்யோன்யமாக வாழும்
ஆசை நாயகன்போல, அங்கத்தாருடன் சேர்ந்து
துன்பம் நெருங்கி யென்ன-துயரம் வளைந்துமென்ன
துன்னு சரடூசிபோற்-றுலங்க வாழ்த்தியென்று
- அபி
5. கரங்கள் சிரத்தில் வைத்து-கண்ணிலானந்த பாஷ்பம்[6]
கசிந்து வழியநின்று; கர்த்தர் விப் பத்தற்கின்று[7]
சுரந்தாவி மழைபோலச்-சொரியுஞ் சொரியுமென்று
சோபனஞ் சொல்லித்தேற்றி; தொடர்பாய்ப் பிரார்த்தித்
தேற்றி - அபி
- ஜே.ஆர். அர்னால்ட்
No comments:
Post a Comment