அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே

                        அன்பின் ஆவியானவரே

                        நிரப்பிடுமே எங்கள் உள்ளங்களை

                        தூய தேவ ஆவியே

 

1.         வல்லமை விளங்கும் ஆவியே

            வரங்கள் நல்கும் ஆவியே

            வானம் திறந்து அக்கினி மழையாய்

            வாரும் எங்கள் மத்தியிலே

 

2.         தாகம் தீர்க்கும் ஆவியே

            தடைகள் உடைக்கும் ஆவியே

            கட்டுகள் உடைத்து கண்ணீரை துடைத்து

            கவலை நீக்கும் ஆவியே

 

3.         சுத்திகரிக்கும் ஆவியே

            சுயத்தை நொறுக்கும் ஆவியே

            தேவ சுபாவம் கிருபை நல்கும்

            பரிந்து பேசும் ஆவியே

 

4.         அறிவை உணர்த்தும் ஆவியே

            ஆற்றல் விளங்கும் ஆவியே

            தேவ சபையில் வாசம் செய்யும்

            மகிமை விளங்கும் ஆவியே

 

5.         உருக்கும் அக்கினி எரியுமாப் போல்

            வானம் கிழித்து இறங்குமே

            ஜாதி ஜனங்கள் தேசம் அசைய

            அரும் பெரும் காரியம் செய்திடுமே

 

6.         துள்ளிக் குதிக்கும் மான்கள் போல

            காண்டா மிருக ஆற்றல் போல

            நிமிர்ந்து நிற்கும் கேதுரு போல

            தேவ சபையை நிறுத்துமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்