23 January 2025

அப்பா உம் சித்தமென்று அருமை மகன் கூவினதும்

கீ.கை:163

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

163.

 

                   “இராக்காலம் கர்த்தருடைய” - என்ற மெட்டு

 

1.       அப்பா உம் சித்தமென்று அருமை மகன் கூவினதும்

          அப்பா உம் சித்தமென்று அரும்பா டடைந்ததும்

 

2.         வானத்திலே யிருக்கும் வல்லவரின் தூதனவன்

            வையகத்தை மீட்க வந்த வல்லவரைத் தேற்றினதும்

 

3.         நெற்றியினால் வேர்வை சிந்தம் நீசராம் எங்களுக்காய்

            நித்தியனார் பொன்மேனி இரத்தமாய்ப் பொங்கினதே

 

4.         இரத்தமதாய்ப் பொங்கி நிற்கும் நேசர் முகம் பாராயோ

            பார்த்தால் உன் பாவமெல்லாம் பஞ்சாகு மென்றாரே

 

5.         பாதகராம் நாங்கள் செய்த பாதகத்தை நீர் சுமந்து

            தேவ கோ பாக்கினையின் செக்காட்டப் பட்டீரோ

 

6.         செக்கதிலே ஆட்டப்பட்டீர் செந்நீர் வடிய விட்டீர்

            தேவ கோ பாக்கினையின் தீயை அணைத்து விட்டீர்

 

7.         தீயை அவித்ததினால் தீபாவி மோச மற்றேன்

            மோட்சத்துக் காளானேன் முதல்வா உமின் கிருபை

 

8.         உம் கிருபை எண்ணி எண்ணி உம்மேல் நிதம் உருகி

            எம் பாவத்தைத் தள்ள இறைவா துணைபுரியும்

 

9.         பாவத்திலே நிலைக்கும் பாவியே உம்முடைய

            பாடு பரிதாபம் பாழ் நரகும் பங்காகும்

 

10.       பாழ்நரகில் பங்கடையப் பாருலகில் இரட்சகரும்

            பாடுபட வந்ததில்லை பார்த்துணர்ந்து கொள்வாயே

 

11.       பார்த்து மனதுணர்ந்து பாவமதை நீ வெறுத்தால்

            பார்த்திபனார் தம்வலத்தில் பாக்கியமாய் வாழ்ந்திடுவாய்

 

12.       வாழ்ந்திருக்க வென்று வருவார் திருச்சுதனார்

            வாழ்ந்திருக்கும் வேளை தனில் வாழ்த்திப் புகழ்ந்திடுவார்

 

13.       வாழ்த்திப் புகழ்ந்திடுவார் வானோர் புடைசூழ

            வாழுவாய் நீடூழி காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...