கிருபாதார பலியாமே
கிருபாதார பலியாமே
திருகுமாரன் கிறிஸ்தேசுதாமே
கிருபாதார பலியாமே...
1. பிதாவானோர் அன்பினை சிந்திப்பாயே
ஓரே பேரனோரையே தந்தனரே - 2
பிழைத்திடவே இந்த மனுக்குலமே
பரன் நோக்கத்தை நிறைவேற்றினாரே - 2
கிருபாதார பலியாமே...
2. இலவசமாய் தேவ கிருபையினால்
இயேசுவில் உள்ள மீட்பை பெற்றிடவே - 2
தேவ குமாரனை பலியாக்கினதால்
தேவ அன்பினை வெளிப்படுத்தினாரே - 2
கிருபாதார பலியாமே...
3. சிரசினில் முள்முடி சூட்டியதால்
திருமுகம் குருதியால் நனைந்ததுவே - 2
கரம் கால்களில் ஆணி பாய்ந்ததினால்
இரத்த சாட்சியாய் இயேசு தொங்கினாரே - 2
கிருபாதார பலியாமே...
4. சர்வலோக பாவ நிவாரணமாய்
தேவ குமரன் இயேசு பலியானாரே - 2
காயங்களிலே ஓடும் இரத்தத்தினாலே
தூய்மையான ஜீவியம் பெற்றிடலாமே - 2
கிருபாதார பலியாமே....
5. ஓரே தரம் மகா பரிசுத்த ஸ்தலதில்
பிரவேசித்தே தம்மை பிதாவிடத்தில் - 2
பழுதற்ற பலியாக ஒப்புவித்ததால்
பூரண சுத்தனாக்கவே சித்தம் கொண்டாரே -
2
கிருபாதார பலியாமே....
6. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராய்
புது சிருஷ்டியில் எம்மை உருவாக்கியே -
2
அழியாமை ஜீவன் அளித்ததினாலே
அழிவில்லா சுதந்திரம் அடைந்திடுவோம் -
2
கிருபாதார பலியாமே
திருகுமாரன் கிறிஸ்தேசுதாமே
கிருபாதார பலியாமே...
YouTube Link
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment