பசும் பொன் மங்கிப் போனதே
பசும்
பொன் மங்கிப் போனதே
தங்கங்கள்
மண்ணானதே
எங்கள் தேவா மனமிரங்கும்
எங்கள் மீது மனமிரங்கும்
1. சிற்றின்ப மயக்கத்தினால்
சிலுவைப் பாதை மறந்தோம்
உலகத்தின் நேசத்தினால்
உன்னத பிரதிஷ்டை இழந்தோம்
2. ஆடம்பர ஆசையினால்
அர்ப்பண வாழ்வை மறந்தோம்
ஆதி அன்பு குறைந்ததையா
அனல் மூட்டி எழும்ப்புமையா
3. நெரிந்த நாணலையும்
முறிந்திடவே மாட்டீர்
மங்கி எரியும் திரியை
அணைத்திடவே மாட்டீர்
- Reegan Gomez
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment