அப்பா உந்தன் இளைய மகன்
அப்பா
உந்தன் இளைய மகன்
உம்மை தேடி வந்திருக்கிறேன்
உம் மகன் என்று சொல்ல தகுதியில்லை
உம் பணி செய்ய என்னை வைத்துக்
கொள்ளும்
1. தூரமாய் பிரிந்து போனேன்
துன்மார்க்கமாய்
அலைந்து சென்றேன்
ஆஸ்தியை அழித்து
வந்தேன் - உம்
அன்பை மறந்து சென்றேன்
2. பஞ்சத்தால் குறைவு பட்டேன்
பசியோடு வாடி நின்றேன்
பரத்திற்கு
விரோதமாக - பல
பாவங்கள் செய்து வந்தேன்
3. உம் அன்பை உணர்ந்து வந்தேன்
உம் பாதம் சரணடைந்தேன்
மனந்திரும்பி
வந்துவிட்டேன் - என்னை
மன்னித்து ஏற்றுக் கொள்ளும்
4. ஜீவன் இருக்கும் வரை
இனி உமக்காய் வாழ்ந்திருப்பேன்
மரணம் பிரிக்கும் வரை
மன நிறைவாய் பணி செய்வேன்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment