அப்பா உம் சித்தம் போல
அப்பா
உம் சித்தம் போல
அன்றாடம்
என்னை நடத்தும்
ஆட்கொள்ளும்
ஆளுகை செய்யும்
ஆளுனரே
சரணம்
1. வெண்பனி போல என்னை
தூய்மை ஆக்கிடுமே
ஆவி ஆன்மா சரீரமெல்லாம்
என்றும் உமக்கே சொந்தம்
2. சுயம் என்னில் மடிந்திடணும்
சிலுவை சுமந்திடணும்
உலக இன்ப மேன்மைகளை
உதறி தள்ளிடணும்
3. குயவனே உம் கையில்
களிமண்ணாய்
வந்தேன்
உந்தன் சித்தம் போல் வனைந்து கொள்ளும்
உம் சித்தம் செய்திடுவேன்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment