அப்பா உமக்கு மகிமையும்
அப்பா உமக்கு மகிமையும்
அப்பா உமக்கு கனத்தையும்
செலுத்துகிறோம்
நாங்கள் செலுத்துகிறோம் - 2
எங்கள் நடுவிலே நீர் வந்ததற்காக - 2
எல்லா நேரமும் துதியை செலுத்துகிறோம்
- 2
1. எண்ணில்லா நன்மை செய்த தேவனே
எண்ணி எண்ணி உந்தன் நாமம் பாடுவேன் -2
கண்மணி போல் என்னை காத்த நேசரே
காலமெல்லாம் உந்தன் புகழ் பாடுவேன் -2
2. வானம் பூமி படைத்த எங்கள் தேவனே
வழுவாது என்னைக்
காத்த ராஜனே -2
கிருபை இரக்கம் நிறைந்த எங்கள் நேசரே
கீதங்களால் உந்தன் நாமம் புகழுவேன் -2
3. பாவம் போக்க பாரில் வந்த தெய்வமே
பணிந்திடுவேன்
உந்தன் பாதம் என்றுமே
பாசத்துடன் சிலுவை சுமந்த நேசரே
பயத்துடனே உந்தன்
நாமம் தொழுகுவேன் -2
Comments
Post a Comment