அதிசயமான தேவனே

அதிசயமான தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                                    பல்லவி

 

                   அதிசயமான தேவனே!

                        ஆலோசனை தரும் கர்த்தரே!

                        ஆசை உந்தன்மேல் மாத்திரம்

                        உம் அன்புக்கீடேதுமுண்டோ?

 

                             சரணங்கள்

 

1.         தந்தை போல் சுமந்தவரே - தாயின்

            கருவினில் காத்தவரே

            உம்மாலாகாத காரியம் ஒன்றுமில்லை

            உம்மை நம்பினோர் வெட்கியே போனதில்லை - அதிசய

 

2.         நேசக்கொடி எந்தன்மேல் - வீசி

            பாசமாய்ப் பறந்திடுதே

            நீசன் என்னையும் பேர் சொல்லி அழைத்தீரன்றோ?

            நித்தம் கிருபையினால் முடிசூட்டிடுவீர் - அதிசய

 

3.         உலகில் உள்ளவனிலும் - என்னில்

            இருப்பவர் பெரியவரே

            உந்தன் வல்லமையால் ஜெயம் பெற்றிடுவேன்

            கர்த்தர் என் முன்னே செல்வதால் கலங்கிடேனே - அதிசய

 

4.         குயவன் கை களிமண்ணைப் போல் - தேவா!

            உம்மிடம் ஒப்புவித்தேன்

            உந்தன் மனதின்படி என்னை வனைந்திடுமே

            எஜமானனே உமக்கு நான் அடிமையன்றோ! - அதிசய

 

5.         சீயோனில் வாசம் செய்யும் - எந்தன்

            இயேசுவை அடைந்திடவே

            ஆசையாய் இலக்கை நோக்கியே ஓடிடுவேன்

            வேகம் பந்தயப் பொருளைப் பெற்றிடுவேன் - அதிசய

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்