அப்பா பிதாவே உம்மையே பணிகின்றோம்
அப்பா பிதாவே
உம்மையே பணிகின்றோம் - துதித்து
பாடியே போற்றுகின்றோம்
அல்லேலூயா (2) பிதாவுக்கே
அல்லேலூயா (2) சுதனுக்கே
அல்லேலூயா (2) ஆவிக்கே
அல்லேலூயா (2) தேவனுக்கே
1. மூவரான பிதா சுதன் தூய ஆவியில்
முதலிடம் வகித்திடும் அப்பா நீரே
முதல்வரின் திருப்பாதம் இரண்டிலும்
முத்தங்களை தந்தே நாங்கள்
தொழுகின்றோம்.
2. வானத்தையும் பூமியையும்
மனிதராம் எம்மையும்
ஞாலத்திலே படைத்திட்ட நாதனே நீரே
சிருஷ்டிப்பின் காரணராம் தேவனே
சிருஷ்டிப்பின் நாங்கள் உம்மை
வாழ்த்துகின்றோம்
3. எந்தன் சித்தம் ஒன்றும் வேண்டாம்
அப்பா பிதாவே / உந்தன் சித்தம்
சித்தம் போதுமென்றே இயேசுவை
எந்தன் பாவம் நீங்கிடவே அனுப்பிய
உந்தன் அன்பை எண்ணி
உம்மை துதிக்கின்றோம்
4. அப்பா பிதாவே என்று உம்மை
கூப்பிடச் செய்திடும்
புத்திர சுவிகார ஆவியும் தந்தீரே
பயந்திடும் அடிமையின் ஆவியை
பெற்றிடாமல்
பிள்ளைகளாய் இருக்கின்றோம்
5. புத்திர நல் சுவிகார ஆவியைப் பெற்றதால்
கிறிஸ்துவுடன் சுதந்திரர் ஆனோமே
அவரோடு மகிமையை அடையவே
அவரோடு பாடுகளைச் சகிக்கின்றோம்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment