ஏதேனில் திருமணத்தை உண்டாகின தேவனே
ஏதேனில் திருமணத்தை
உண்டாகின
தேவனே - 2
1. தாயின் கருவிலே உருவாகும் முன்னமே
நியமித்தீர்
இருவரையும்
ஒருமனமாய் இணையவே - 2
இது கர்த்தராலே வந்த காரியம்
மகிழ்ந்து களிகூருவோம்
ஆசீர்வதியும் எங்களை
இத்திருமணம்
நறுமணமாகவே - (2)
2. மணவாட்டி சபையாக
மணவாளனை காணவே - 2
இருமனமும் ஒருமனமாக
உம் ராஜியம்
கட்டவே
இது கர்த்தராலே வந்த காரியம்
மகிழ்ந்து களிகூருவோம்
ஆசீர்வதியும் எங்களை
இத்திருமணம்
நறுமணமாகவே - (2)
- Jerushan Amos & Hensaleta Dorrya
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment