அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா
உலகை மறந்து உம்மை
நோக்கி
உம்மிடத்தில் வந்தேன்
என்னை அனைத்து தினமும்
காக்கும்
தெய்வம் நீர் அல்லவோ...
– 2 (அப்பா இயேசப்பா...)
நீரே எந்தன் தேவன்,
நீரே எந்தன் தெய்வம்,
நீரே எந்தன் மேய்ப்பன்,
நீரே எந்தன் மீட்பர்...
– 2
என்னோடிருந்து என்னை
நடத்தும்
நல்ல மேய்ப்பன் நீர்
அல்லவோ... – 2 (அப்பா இயேசப்பா...)
நீரே எனது தாயும்,
நீரே எனது தந்தை,
நீரே எனது சொந்தம்,
நீரே எனது சொத்து...
– 2
எல்லாமாக என்னோடிருந்து
பாதுகாப்பவர் நீர்
அல்லவோ... (அப்பா இயேசப்பா...)
நீரே எனது கன்மலை
நீரே எனது கோட்டை
நீரே எனது அடைக்கலம்
நீரே எனது துருகம்...
– 2
எல்லா வேளையும் என்னோடிருந்து
பெலன் தருபவர் நீர்
அல்லவோ... – 2 (அப்பா இயேசப்பா...)
No comments:
Post a Comment