அப்பா உம் சமூகத்தில

அப்பா உம் சமூகத்தில

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அப்பா உம் சமுகத்தில

                        எப்போதும் ஆராதனை

                        அப்பாவை துதிக்கையிலே

                        எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

 

1.         தாயைப்போல தேற்றுகிறீர்

            தகப்பனைப்போல சுமக்கின்றீர்

            சோதனை வருகின்ற நேரமெல்லாம்

            தாங்கி எங்களை நடத்துகிறீர் - 2 - அப்பா

 

2.         கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்

            ஆகாரத்தை தருகின்றீர்

            அவைகளைப் பார்க்கிலும் எங்களையே

            மிகவும் நேசித்து நடத்துகிறீர் - 2 - அப்பா

 

3.         எங்கள் மீது கண்ணை வைத்து

            ஆலோசனை சொல்லுகின்றீர்

            தீங்கு வருகின்ற நேரமெல்லாம்

            கூடார மறைவில் மறைக்கின்றீர் - 2 - அப்பா

 

4.         உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்

            உம்மாலே மதிலையும் தாண்டிடுவேன்

            தீயையும் தண்ணீரையும் கடந்திடுவேன்

            செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்

 

 

- Pastor. Lucas Sekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்