அச்சம் வேண்டாம் பயமும் வேண்டாம்
அச்சம் வேண்டாம் பயமும் வேண்டாம்
ஆண்டவர் பணிக்காய் இன்றே புறப்படு
தூக்கம் வேண்டாம் தயக்கம் வேண்டாம்
தூயவர் பணிக்காய் துரிதமாய்ப் புறப்படு
காலம் பொன்னானது மீண்டும்
வராதது - 2
கிருபையின் வாசல் அடைபட்டுப்
போனால்
சத்தியம் என்னாவது
கிருபையின் வாசல் அடைபட்டுப்
போனால்
இரட்சிப்பு என்னாவது - அச்சம்
வேண்டாம்
1. தேவன் தந்திடும் புதுபெலன்
பெற்றிடு
தேவனுக்காக
பெரியதைச் செய்ய நினைத்திடு - 2
விசுவாசம் என்னும் கேடயம் அணிந்து புறப்படு
- 2 - காலம் பொன்னானது
2. வல்லவர் உன்னோடிருப்பார் நடத்துவார்
வழிகளிலெல்லாம் பாதுகாப்பாய் போசிப்பார் - 2
ஆவியின் பட்டயம் பிடித்திடு இன்றே புறப்படு
- காலம் பொன்னானது
3. கண்ணீரோடு வசனங்கள் விதைத்திடு
கம்பீரமான அறுவடை பெற்றிடு - 2
எஜமான் கண்டு
மகிழ்ந்திடு உள்ளம் பொங்கிடு - 2- காலம் பொன்னானது
- J. ஜேக்கப் ஞானதாஸ்
Comments
Post a Comment