ஒத்தாசை அனுப்பும் தேவனே

ஒத்தாசை அனுப்பும் தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

            ஒத்தாசை அனுப்பும் தேவனே

            உம்மை துதித்து பாடுவேன் - 2

            ஒத்தாசையாக என்னோடே இருந்து

            காரியத்தை வாய்க்க செய்வீர் - 2

 

                        வாய்க்க செய்வீர் காரியத்தை

                        உம் கைகளால் வாய்க்க செய்வீர்

                        வாய்க்க செய்வீர் காரியத்தை

                        ஒரே வார்த்தையால் வாய்க்க செய்வீர் - 2

 

2.         ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலை

            ஒத்தாசை அனுப்பி மீட்டுக்கொண்டீர் - 2

            செங்கடல் பிளந்து எரிகோவை

            தகர்த்து கானானை நீர் கையளித்தீர் - 2 - வாய்க்க

 

3.         சோதனையால் மனம் சோர்ந்த நேரம்

            தேவைகளால் மனம் தளர்ந்த நேரம் - 2

            அன்பின் கரத்தால் என்னைத் தேற்றி

            இதுவரை என்னை நடத்தி வந்தீர் - உம் - 2 - வாய்க்க

 

4.         பாதையை தடுத்து நன்மையை கெடுத்து

            எனக்கு விரோதமாய் எழும்பினாலும் - 2

            எதிர்த்தோர் கண் முன் என்னை உயர்த்தி
           
எட்டாத உயரத்தில் ஏற்றி வைப்பீர் - 2 - வாய்க்க

 

 

- Benjamin .V

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே