அபிஷேகம் தாரும் ஆவியானவரே
அபிஷேகம் தாரும் ஆவியானவரே
அபிஷேகம் ஊற்றும்
ஆவியானவரே
ஆவியானவரே - 4
1. உன்னத பெலனால்
நிரப்பிடுமே
சாட்சியாய் வாழ செய்திடுமே
உமது கனிகளால் நிரப்பிடுமே
அனுதின வாழ்வினிலே
2. அற்புத அடையாளம் செய்திடவே
வசனத்தை பலமாய் சொல்லிடவே
வல்லமை வரங்களைத் தந்திடுமே
ஊழிய பாதையிலே
3. ஞானமும் அறிவும் தந்திடுமே
நீதியின் பாதையில் நடந்திடவே
வாழ்வினிலே விடுதலை தந்திடுமே
ஜீவிய பாதையிலே
Comments
Post a Comment