அந்தி சந்தி மத்தியான வேளையிலே

அந்தி சந்தி மத்தியான வேளையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அந்தி சந்தி மத்தியான வேளையிலே

                   என் ஆண்டவர் இயேசுவை

                        எந்நாளும் தொழுதிடுவோம்

 

1.         தாழ்மையில் என்னை தெரிந்தெடுத்தீர்

            தயாபரா உம்மை துதித்திடுவேன்

            எளிமையும் சிறுமையும் நிறைந்த என்னை - 2

            என்றென்றும் மாறாத கிருபை தந்தீர்

 

2.         பரிசுத்த சந்நிதி முன்னிலையில்

            பணிந்தும்மை எந்நாளும் தொழுதிடுவேன்

            பரிசுத்த கிருபையும் நிறைந்த உம்மை - 2

            சுதியோடும் பாட்டோடும் தொழுதிடுவேன்

 

3.         நொறுங்குண்ட இதயத்தை புறக்கணியீர்

            பணிந்த ஆவியில் நிறைத்திடுவீர்

            கர்த்தரின் வீட்டினில் நிலைத்திடுவேன் (2)

            சாட்சியாய் வாழ்ந்திட அருள்தருவீர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்