14 May 2024

தேவன் அற்புதம் நாம் தேடும் அதிசயம்

தேவன் அற்புதம் நாம் தேடும் அதிசயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவன் அற்புதம் நாம் தேடும் அதிசயம்

                   கவலையில்லை துயரமில்லை

                        கர்த்தர் நம் வசம் கர்த்தர் நம் வசம்

                        இருள் சூழ்ந்த இதயமதில்

                        இனிமை தந்தவர் என் இரக்கமுள்ளவர்

 

1.         அவர் சொல்லே அருமருந்து

            அன்பு செய்யும் திருவிருந்து

            ஒளிமயமாய் நாம் வாழ வழி காட்டினார்

            இயேசுவைப் பாடும் போது என்ன ஆனந்தம்

            இதை விடவா உலகில் உண்டு பேரின்பம்

 

2.         எதிர்காலம் இனிதாகும்

            ஏழை கோலம் இனி மாறும்

            வல்ல நாதர் அருள் இருந்தால்

            மகிமை பெறுகுமே

            வானம் பூமி படைத்தவரை போற்றி புகழுவோம்

            வருங்காலம் வசந்தமாகும்

            வாழ்த்தி பாடுவோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

தேவன் அருளிய சொல்லி முடியாத

தேவன் அருளிய சொல்லி முடியாத

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவன் அருளிய சொல்லி முடியாத

                        ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்

                        ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

                        கோடா கோடி ஸ்தோத்திரம்

 

1.         கிருபையினாலே விசுவாசம் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்களே

            இது உங்களாலே உண்டானதல்ல தேவன் தந்த ஈவே

 

2.         தாகமுள்ளோரின் தாகம் தீர்த்திடும் ஜீவத்தண்ணீர் இயேசு கிறிஸ்துவே

            இது நித்திய ஜீவன் தரும் வார்த்தையே தேவன் தந்த நல்ல ஈவே

 

3.         உலர்ந்து போன எலும்புகளெல்லாம் உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே

            இது இருதயத்தின் அன்பின் ஆவியே தேவன் தந்த நல்ல ஈவே

 

4.         அந்தகார இருளிலிருந்து ஆச்சரிய ஒளிக்குள் அழைத்தாரே

            இது தேவன் நம்மேல் வைத்த இரக்கமே தேவன் தந்த நல்ல ஈவே

 

5.         குடும்ப வாழ்விலும் சந்தோஷமாய் குறைவில்லாது நடத்துகின்றாரே

            நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம் தேவன் தந்த நல்ல ஈவே

 

6.         ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட நன்மைகளைத் தருகின்றாரே

            இது தேவன் தரும் ஆசீர்வாதமே தேவன் தந்த நல்ல ஈவே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...