மேகமீதில் இயேசு சுவாமி


பல்லவி

                   மேகமீதில் இயேசு சுவாமி
                        வேகம் வாராரே

அனுபல்லவி

            ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே
            அவர் வாராரே

1.         ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
            அவனியில் வாராரே
            மீண்டவரோ மேலோகமே செல்ல
            மேதினியை விடுவார்                            - மேகமீதில்

2.         கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம்
            கிளம்பியே யெழும்பிடுவார்
            மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
            மறைந்தே போவாரே                             - மேகமீதில்

3.         பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
            பாடுபட்டவர் தாமே
            கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
            கூவியே கொடுத்திடுவார்                      - மேகமீதில்

4.         அவருரைத்த அடையாளங்களெல்லாம்
            தவறாமல் நடக்கின்றதே
            அவர் வரும் வேளையை எவருமே அறியார்
            ஆண்டவரே யறிவார்                            - மேகமீதில்

5.         ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
            ஆண்டவர் இயேசு தாமே
            நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
            ஜோதியின் ஆளுகையில்                     - மேகமீதில்

6.         அல்லேலூயா கீதமே பாடி
            அகமகிழ்ந்தாடிடுவோம்
            வல்லவர் வரும் வேளையுமிதோ
            மெல்லவே நெருங்கிற்றே                       - மேகமீதில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு