ரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்


1.       ரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம், லோகம் நடுங்க
            நரகாக்கினையைச் சொல்லுவோம் பாவ மடங்க - ஓ
            பூர்வ கால தேவதாசர் விஸ்தரித்தாற்போல்
            மோட்ச லோகம் போகும் முன்னமே

பல்லவி

                        செல்வோம் செல்வோம் ஆர்ப்பரிப்புடனே
                        செய்வோம் செய்வோம் போர் பலத்துடனே - ஓ
                        நானா ஜாதி பாஷைக்காரர் ரட்சிப்படைய
                        மோட்ச லோகம் போகும் முன்னமே

2.         சுவிசேஷ யுத்த சத்தம் பூமியெங்கும் கேள்
            மீட்படைந்த பேதைகளின் சாட்சிகளும் கேள் - ஓ
            முழுலோகத்தையும் வெல்ல இன்னும் கொஞ்ச நாள்
            மோட்ச லோகம் போகும் முன்னமே - செல்வோம்

3.         தீதாய் சத்துருக்களென்ன சொன்ன போதிலும்
            சுத்த ஆவியின் பெலத்தைப் பெற்று யாவிலும் - ஓ
            உண்மையாகப் போர் புரிந்தால் வெல்வோம் சாவிலும்
            மோட்ச லோகம் போகும் முன்னமே - செல்வோம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு