25 June 2018

தாகத்தைத் தீருமையா - அபி


பல்லவி

                   தாகத்தைத் தீருமையா - அபி
                        ஷேகத்தைத் தாருமையா                    - எங்கள்

1.         ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
            ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
            ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
            இரங்கிடும் இப்போதே எம்மில்              - எங்கள்

2.         சத்துருவாலே சகிக்க வொண்ணாத
            எத்தனையோ இடர் வந்ததையோ,
            அத்தனே உமது அருள் பலத்தாலே
            நித்தமும் ஜெயம் கொள்வோம் - நாங்கள்          - எங்கள்

3.         வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
            போதகராம் ஆவியானவரே,
            பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
            பரிசுத்த மாவோமே - நாங்கள்              - எங்கள்

4.         சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
            கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
            சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
            மெத்தவும் பலன் காண்போம் - நாங்கள்             - எங்கள்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...