28 June 2018

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

கன்:189

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

                        நீயும் வா உந்தன் நேசர்

                        ஆவலாய் அழைக்கிறார் - இதோ

 

                             சரணங்கள்

 

1.         பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்

            கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே

            கண்டிடும், வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் - அழை

 

2.         நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்

            நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே

            நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் - அழை

 

3.         துன்பம் சகித்தவர், துயரடைந்தவர்

            இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்

            துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ - அழை

 

4.         அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்

            சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே

            நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ - அழை

 

5.         கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்

            கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே

            உயிர்த்தார், ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே - அழை

 

6.         சாந்த சொரூபனே! சத்திய வாசனே!

            வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே

            தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் - அழை

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...