27 June 2018

வரவேணும், என தரசே


                    வரவேணும், என தரசே,
                        மனுவேல், இஸரேல் சிரசே.
                        அருணோதயம் ஒளிர் பிரகாசா,
                        அசரீரி ஒரே சருவேசா!                         - வர

சரணங்கள்

1.         வேதா கருணாகரா, மெய்யான பராபரா
            ஆதார நிராதரா அன்பான சகோதரா
            தாதாவும் தாய் சகலமும் நீயே
            நாதா, உன் தாபரம் நல்குவாயே                                    - வர

2.         படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
            முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
            இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
            இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்.             - வர

3.         வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
            கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
            ஞானாகரமே, நடு நிலை யோவா
            நண்பா, உனத நன்மையின் மகா தேவா!                       - வர

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...