இயேசு ராஜன் வருவார் தூதரோடும் வருவார்
பல்லவி
இயேசு ராஜன் வருவார் தூதரோடும் வருவார்
பக்தரை வானத்தில் சேர்த்திடவே
- நான்
ஜோதியாய் அவர் முகம் கண்டிடுவேன்
பின்னும்
ஜெய கம்பீரம் கொண்டுளம் பொங்கிடுமே
1. மணவாளனோடு மணவாட்டியாம் சபை
மங்களமாய் கவி சாற்றிடுமே அப்போ
மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் - அவர்
நேசத்தின் ஆழத்தை ருசித்திடுவோம் - இயேசு
2. முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளையங்கி தரித்து
கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார் அதில்
சேர்ந்திடுவேன் நானும் பாடிடுவேன் - அன்று
பொற்கிரீடம் தரித்தாடிடுவேன் -
இயேசு
3. காதலித்தேன் நான் காசினியின் இன்பம் விட்டு
கர்த்தரோடென்று முறவாடிட - அங்கு
கனக மணவறை ஜொலித்திடுமே - அப்போ
கர்த்தராம் யேசுவில் சுகிப்போம் -
இயேசு
4. வானத்தின் எக்காளம் தொனித்திடும் சமயத்தில்
சுத்தர்கள் யாவரும் பறந்திடுவார் - அப்போ
அத்தனின் கலியாண விருந்ததிலே நாமும்
நித்தம் அவரோடார்ப்பரிப்போம் -
இயேசு
Comments
Post a Comment